அம்புட்டு பாசமா? கம்யூனிஸ்டுகளுக்கு இபிஎஸ் விரிப்பது வஞ்சக வலை.. சண்முகம் காட்டம்..!
கம்யூனிஸ்டுகளுக்கு இபிஎஸ் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல, வஞ்சக வலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - CPI மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - CPM) ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்டிருந்தன. தொழிலாளர் உரிமைகள், விவசாயிகளின் நலன், மற்றும் சமூக நீதி குறித்த அவர்களின் போராட்டங்கள் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றிருந்தன. இருப்பினும், கடந்த சில தசாப்தங்களில், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் ஆதிக்கம் அதிகரித்ததால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக பலர் கருதுகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, அரசியல் களத்தில் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவு செய்யும் தலைவராக அறியப்படுபவர். கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அவர் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து விமர்சனம் செய்து பேசியது பரவலான கவனத்தை ஈர்த்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது என்று விமர்சித்தார். இந்தக் கருத்து, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும், அவை மக்கள் மத்தியில் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாகவும் அவர் கருதுவதை வெளிப்படுத்துகிறது.
இதனிடையே, கம்யூனிஸ்டுகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல., வஞ்சக வலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறினார். எடப்பாடி பழனிசாமி காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு பேசுவதாகவும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பேச்சு அதற்கு நேர்மாறாக இப்போது பிஜேபியோடு கூட்டணி வைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: #BYEBYE STALIN கதற விடுது..! இன்னும் கதற விடுவோமா? அடித்து தூள் கிளப்பும் இபிஎஸ்..!
போன வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார் என கூறிய அவர், கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம் என்றார். ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி..! நலத்திட்டங்களை பட்டியலிட்ட இபிஎஸ்..!