×
 

”பார்ப்போம் இன்னும் 3 நாள் தானே இருக்கு...: - விஜய் குறித்த கருத்துக்கணிப்பு பற்றிய கேள்விக்கு கனல் கண்ணன் தெறி பதிலடி...!

பெண்கள் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து வந்து கும்மியடித்து குளவியிட்டு சிவபெருமானை வழிபாடு செய்தனர்

விஜய் ஆட்சி அமைப்பார் என்ற கருத்துக் கணிப்பு குறித்த கேள்விக்கு  அவர் ஒன்றும் பத்மகிரீஸ்வரர் சிவபெருமான்‌ மகன் இல்லையே - திண்டுக்கல்லில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கருத்து 

திண்டுக்கல்லில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் கிரிவலம் - பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு. சித்ரா பௌர்ணமி நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரன் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பெண் பக்தர்கள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

பெண்கள் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து வந்து கும்மியடித்து குளவியிட்டு சிவபெருமானை வழிபாடு செய்தனர்

பின்னர் ஸ்டண்ட் மாஸ்டர்கனல் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 250 வருடங்களுக்கு முன்பு மலையில் இருந்து கீழே இறக்கப்பட்ட பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: என்னவா இருக்கும்..? "சின்னதம்பி உன்னை நம்பி காத்திருக்கு இந்த நாடு"..! விஜய் போட்டோவுடன் பாடலை பகிர்ந்த இளையராஜா..!!

இறைவன் கீழே இருந்தும் நாங்கள் கிரிவலம் செல்வது வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது.  நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவில் யாரு ஜெயித்தாலும் இந்துக்களுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சி ஜெயித்தால் நன்றாக இருக்கும். 

ஆக்ஸிஸ் இந்தியா என்ற சேனல் விஜய் ஆட்சி அமைப்பார் என்று கணித்துள்ளனர். இதுகுறித்த கேள்விக்கு,  பார்ப்போம்‌. அவர் ஒன்றும் பத்மகிரீஸ்வரர் சிவபெருமான் மகன் இல்லையே.. பார்ப்போம் இன்னும் மூன்று நாட்கள் தானே இருக்கிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆன்மீகமா? ஸ்ட்ராடஜியா? விஜயின் அடுத்த அடியில் வேளாங்கண்ணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share