×
 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது?... சல்லடை போட்டு சலித்தெடுக்கும் காவல்துறை... வெளியான பகீர் பின்னணி...!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரம் நடந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக திமுக முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரை கைது செய்வது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் மூன்று பேரும், நேற்ற்ய் ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், திருநாவுக்கரசு என்பவர் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்துள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இதுவரை திருநாவுக்கரசு உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், சில எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.35 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "அறிவாலயத்து... அடக்கு வாயை"..! ஒரு அமைச்சரை பாத்து பேசுற பேச்சா..? கொந்தளித்த தவெக..!

சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அசோக் குமார் முக்கியமாக செயல்பட்டதாகவும், அவருக்கு பின்னணியில் செந்தில் பாலாஜி இருந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்களில் தெரியவந்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள், கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். முதலில் அசோக் குமாரை கைது செய்வதா அல்லது செந்தில் பாலாஜியை கைது செய்வதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஒப்புதல் அளித்த பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக அசோக் குமாரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விவகாரத்தில் இன்னும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, வேறு எந்தெந்த எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, தொலைபேசி உரையாடல்களில் இடம்பெற்ற விவரங்கள் என்ன என்பன உள்ளிட்ட அம்சங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதனால், இந்த வழக்கில் அடுத்த கட்டமாக யார் கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: கிழிந்து தொங்கும் ஊழல்..! பகல் கொள்ளை அடிக்கும் கமிஷன் அரசு..! தவெகவை பந்தாடிய திமுக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share