×
 

மே தினம்..! செஞ்சட்டை அணிந்து செவ்வணக்கம் செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!

உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மே தினப் பூங்காவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மே ஒன்றாம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்காவிற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். செஞ்சட்டை அணிந்து சென்ற முதலமைச்சர் மே தின பூங்காவில் உள்ள நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மே தினத்தை ஒட்டி உழைப்பாளர் தின உறுதிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றார்.

தொடர்ந்து மே தின விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் படைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துக் கொண்டார். திமுக அரசு தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான் என பெரியார் குறிப்பிட்டதாக தெரிவித்தார். தொழிலாளர்களுக்காக பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து திமுக அரசுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 2.0-வாம் ல.. கூச்சமே இல்லையா? வீட்டுக்கு போங்கய்யா..! கொக்கரித்த பாஜக தலை..!

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதிமாறன், திமுக நிர்வாகிகள, தொமுச நிர்வாகிகள், சென்னை மேயர் பிரியா உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

 

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளுக்கு வெறும் 34 தொகுதி தான்..! மொத்தமாக 200 தொகுதி நமக்குத் தான்.. மார்தட்டும் மு.க ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share