×
 

காதலர்கள் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்..! கைதாகிய 4 பேருக்கு நீதிமன்ற காவல்..! மயிலாடுதுறையில் பதற்றம்..!!

காதலர்கள் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் கைதாகிய நான்கு பேருக்கு நீதிமன்ற காதல் விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன் (19). தலித் இளைஞரான இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தில் வசித்து வரும் லட்சுமிகாந்தன் மகள் திவ்யதர்ஷினி (16). இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து கல்லூரியில் சேர உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இச்செய்தி பெண் வீட்டாருக்கு தெரிய வர இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை நடந்துள்ளது. பெண் வீட்டார் மீது பார்த்திபன் குடும்பத்தினர் பொறையார் காவல் நிலையத்தில் பி.சி.ஆர். வழக்கு பதிவு செய்ய புகார் கொடுத்துள்ளனர். இரவு சுமார் மூன்று மணி அளவில் இருவரும் சாத்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு கீற்று கொட்டகையில் தனித்தனியாக தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினர்.

இச்சம்பவத்தை அந்த பகுதிக்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர். பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை நேரிடாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: அரசியலின் அடுத்தடுத்த திருப்பங்கள்..! நாளை முதல் தவெக..! C.விஜயபாஸ்கரின் புதிய ரூட்... முக்கிய அறிவிப்பு..!

மயிலாடுதுறையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 16 வயது சிறுமியின் தந்தை, சூர்யா, மணிமாறன், உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் ஆணவ கொலையா என்ற கோணத்தில் பொறையார் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

19 வயது பார்த்திபன், 16 வயதான அவரது காதலியும் தூக்கில் தொங்கிய நிலையில் கால்களும் தரையில் பதிந்திருந்ததால் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. காதலர்களை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா, ஆணவக் கொலையா, அல்லது தற்கொலை தானா என்ற கோணத்தில் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்க இருப்பதாக தெரிகிறது. 

இதையும் படிங்க: முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி மீட்டிங்... தமிழக அரசியலில் புதிய திருப்பமா.? எகிறும் எதிர்ப்பார்ப்புகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share