×
 

முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி மீட்டிங்... தமிழக அரசியலில் புதிய திருப்பமா.? எகிறும் எதிர்பார்ப்புகள்..!!

தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ், சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. சில கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. மதிமுகவும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் தோழமை கட்சிகளுடன் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், எதிர்கால அரசியல் திட்டங்களை வகுக்கவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தவெக அரசுக்கு ஆதரவு அளித்துவரும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் இன்று நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், புதிய கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல்

இதையும் படிங்க: விறுவிறு அரசியல்... ஒரே இடத்தில் கூடும் தவெக தோழமை கட்சிகள்..! CPM சண்முகத்துக்கு நேரில் அழைப்பு..!!

வெளியாகி உள்ளது. தங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு கொடுத்த வாக்குறுதியின் படியே ஆட்சி, அதிகாரத்தில் தமிழக வெற்றி கழகம் பங்கு அளித்து வருகிறது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணியுடன் பிற கட்சிகளையும் இணைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 2 போதை ஊசி மரணங்கள்..! அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? வலுக்கும் கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share