தமிழகத்தையே உலுக்கிய மயிலாடுதுறை கோரம்... காதல் ஜோடி மரணத்தில் அதிரடி திருப்பம்...!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தனூர் கிராமத்தில் இன்று காலை காதல் ஜோடி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலர்கள் இறந்த விவகாரத்தில் இறப்பதற்கு முன் காதலன் அளித்த புகாரின் பேரில் காதலியான சிறுமியின் தகப்பனார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமமாக மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுப்பாளையத்தைச் சேர்ந்த காதலன் 19 வயது பார்த்திபன் இறப்பதற்கு முன் 29ஆம் தேதி இரவு காதலியின் தந்தை மற்றும் உறவினர்கள் நான்கு பேர் தன்னை ஜாதிப் பெயரை சொல்லி தாக்கியதாக புகார் அளித்ததன் பேரில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் பொறையார் போலீசாரால் வழக்கு பதிவு செய்து. ஐந்து பேரையும் பிடித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல் மயிலாடுதுறையில் மின் தகன கூடத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்க சிறுமியின் தந்தை லட்சுமி காந்தனை போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: திமுக வழியில் தவெக எடுத்த அதிரடி முடிவு... டாஸ்மாக் பார்கள் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!
லட்சுமி காந்தனின் உறவினர்களான சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார், ஆகிய நான்கு பேரை பொறையார் போலீசார் கைது செய்து மயிலாடுதுறை குற்றவியல் அமர்வு 1 நீதிபதி லோகநாதன் முன்பு ஆஜர் படுத்தினர். நால்வரையும் கடலூர் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் 15 நாள் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் நால்வரையும் கடலூருக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த வழக்கில் சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன் இதய நோய் மற்றும் பல்வேறு நோய்களில் சிக்கித் தவிப்பதால் அவர் மட்டும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி தான் ஆட்டம் ஆரம்பம்... மீண்டும் கோர முகத்தை காட்டப்போகும் வெயில்... வெளியானது அதி பயங்கர எச்சரிக்கை...!