×
 

திமுக வழியில் தவெக எடுத்த அதிரடி முடிவு... டாஸ்மாக் பார்கள் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!

டாஸ்மாக் பார்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

டாஸ்மாக் பார்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் கடைகளும், அவற்றோடு இணைக்கப்பட்ட 2,640 பார்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 மதுபானக் கடைகளைத் தமிழக அரசு சமீபத்தில் மூடியது. 

டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும், அப்போது புதிதாக பார் நடத்த விரும்புவோரும் அந்த டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் புதிய டெண்டர்கள் விடுக்கப்படாமல், 6 மாத காலத்திற்கு அவகாசத்தை நீட்டித்தது. 

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கட்டிங்! 90ml 'டெட்ரா பேக்' விற்க முடிவு?! திமுக கைவிட்ட திட்டத்தை கையில் எடுக்கும் தவெக!

தற்போது ஆட்சி அமைத்துள்ள தவெக அரசும் புதிய டெண்டருக்கான அழைப்பை விடுக்காமல், ஏற்கனவே பார் நடத்துவோருக்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இந்த 3 மாதத்திற்கு பிறகு டெண்டர் விடுக்கப்படலாம் அல்லது மேலும் கால அவகாசமானது நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து இன்று தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் மேலாளர் தலைமையில் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பணிச்சுமையால் அரங்கேறிய விபரீதம்... ஆரணியில் டாஸ்மாக் சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share