×
 

பதறி அடித்து கொண்டு திருப்பூரில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓடிய மதிமுகவினர்! நடந்தது என்ன?

தற்போது மல்லை சத்யாவிற்கும் பொதுச் செயலாளர் வைகோவிற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த வாரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, மதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை துரோகி எனவும், கட்சியின் தொடர்பு இல்லாத நபர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதாகவும், கட்சிக்கு துரோகம் செய்வதாக கூறியிருந்தார். ஏற்கனவே மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கும், மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு சமாதானம் செய்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது மல்லை சத்யாவிற்கும் பொதுச் செயலாளர் வைகோவிற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மதிமுகவில் மல்லை சத்யாவிற்கு ஆதரவாக உள்ளவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுகுறித்து சோசியல் மீடியாக்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. பெரும்பாலானோர் வைகோ மற்றும் துரை வைகோவிற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் 

இந்நிலையில், திருப்பூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர். வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

இதையும் படிங்க: மல்லை சத்யா ஒரு துரோகி! வைகோ பேச்சால் ஆவேசமடைந்த மதிமுக நிர்வாகிகள்..!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர். வைகோ,திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ உள்ளிட்ட தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் சாதிய மோதல்களையும் உருவாக்கும் விதமாக செயல்பட்டு வரும் திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத், வல்லம் பஷீர், உள்ளிட்ட நபர்கள் செய்ல்படுகின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர். நாகராஜ் தலைமையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.மேலும் மதிமுகவின் பொதுச் செயலாளர். வைகோ முதன்மை செயலாளர். துரை வைகோ மீது தொடர்ந்து அவதூறை பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவதூறு பரப்பும் நபர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் மதிமுகவினர் கூறினர். இந்த நிகழ்ச்சியில் மதிமுக நிர்வாகிகள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மகனுக்கு மந்திரி பதவி.. பாஜகவுடன் டீல்.. அப்செட்டில் வைகோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share