கல்வி கட்டணம் நிர்ணயம்... மீறினால் அவ்ளோ தான்..! தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எச்சரிக்கை..!
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவத் துணைப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை முதல் முறையாக நிர்ணயம் செய்து தனியார் தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு 2026-2027, 2027-2028 மற்றும் 2028-2029 ஆகிய அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை கட்டண நிர்ணயம் செய்யப்படாத நிலையில், இப்போது முதல் முறையாக அரசு தலையிட்டு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் மீது அதிகப்படியான பொருளாதார சுமை ஏற்படுவதைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ள விவரங்களின்படி, பல்வேறு துணை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணங்கள் தனித்தனியே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவில் முக்கியமான அம்சம் என்னவென்றால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத் தவிர கூடுதல் தொகை வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது?... சல்லடை போட்டு சலித்தெடுக்கும் காவல்துறை... வெளியான பகீர் பின்னணி...!
இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பாதுகாக்கும் வகையில் அரசு எடுத்துள்ள உறுதியான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. மேலும், துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசமும் ஜூலை 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான கட்டண சுமையின்றி தகுதியான மாணவர்கள் துணை மருத்துவத் துறையில் சேர்ந்து சேவை செய்ய முடியும். அரசின் இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படுவதை பெற்றோர் மற்றும் மாணவர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
இதையும் படிங்க: “500 மீட்டருக்கு தடை; இன்று மாலை 6 மணி வரை கெடு...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி...!