×
 

கொட்டும் மழையில் அங்காளம்மன் ஊஞ்சல்..!! வேட்பாளர் பட்டியலை அம்மன் பாதத்தில் வைத்து வணங்கிய புஸ்ஸி ஆனந்த் ..!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் தவெக ஆனந்த் கலந்துக் கொண்டு வழிபட்டார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயம் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். மேல்மலையனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், சக்தி தலமாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் என்பது பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளை உச்சத்திற்கு கொண்டு செல்லும் அற்புதமான நிகழ்வு.

இத்திரத்தளத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் மாதம் தோறும் அமாவாசை நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது திருக்கோயிலின் தனிசிறப்பாகும். அமாவாசை என்பது இருள் நிறைந்த நாள் என்றாலும், இங்கு அம்மனின் அருளால் ஒளிரும் தீபங்களும், பக்தர்களின் பக்தி ஒலியும் அந்த இருளை விரட்டி ஆன்மீக ஒளியைப் பரப்புகின்றன. 

இந்நிலையில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மணி தரிசனம் செய்து சென்றனர். மேலும் நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அம்மன் பாதத்தில் படைத்து மனமுருகி வேண்டினார்.

இதையும் படிங்க: த.வெ.க விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவு... N. ஆனந்த் முன்னிலையில் குவிந்த நிர்வாகிகள்!

ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மழை சாரலையும் பொருட்படுத்தாமல் அம்மனை மனம் உருகி கையில் தீபம் ஏந்தி வழிபட்டனர். இந்நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் தமிழக அரசின் மூலம் இயக்கப்பட்டது பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக போலீசார் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: உலகிலேயே மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது ஈரான் தாக்குதல்... ஸ்டன் ஆன கத்தார்... ஷாக்கான உலக நாடுகள்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share