×
 

மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

மதுரையில் தனியார் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் (FQL) பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் உழைப்புப் பணத்தை முழுமையாக மீட்டுத் தரவும் குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் களமிறங்கியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சாமானிய மக்களிடம் கவர்ச்சிகரமான வட்டி மற்றும் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனியார் நிதி நிறுவனம் (FQL) பெருமளவில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி மக்களின் சேமிப்புப் பணம் அநியாயமாகக் கொள்ளையடிக்கப்பட்ட இந்த விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்ற நிலையில், தமிழ்நாடு அரசு இதில் நேரடியாகத் தலையிட்டுத் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா IAS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோருடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நேரில் நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை முழுமையாக மீட்டுத் தருவதற்கான வழிமுறைகள், நிறுவன நிர்வாகிகளின் சொத்துகளை முடக்குதல் மற்றும் மோசடியில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் தாமதமின்றி வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கல்லணை திறக்க வருகிறாரா முதல்வர் விஜய்? - அமைச்சர் வினோத் கொடுத்த அப்டேட்...!

இதனைத் தொடர்ந்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் பெ.விஸ்வநாதன், மோசடி சம்பவம் தொடர்பான விரிவான முதற்கட்ட விசாரணை அறிக்கையைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் பணத்தை விரைந்து மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அறிக்கை சமர்ப்பிக்க உடனடியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் வியர்வைத் துளி வீணாகாமல், தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் நடவடிக்கை மிகத் தீவிரமாக இருக்கும் எனவும் அவர் திட்டவட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சாலை விபத்தில் பறிபோன 4 மாணவிகள் உயிர்..!! நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share