×
 

ஜில்லென மாறப்போகும் தமிழகம்..!! வரும் 11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது தெரியுமா..??

7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் 11-ம் தேதி வரை பல மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று (40-50 கி.மீ. வேகம்) மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (6-ம் தேதி) கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம்.

7-ம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யலாம். காற்றின் வேகம் 30-40 கி.மீ. வரை இருக்கும்.8-ம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: இந்தந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்காம்..!! வானிலை மையம் கொடுத்த ஜில் அப்டேட்..!!

9-ம் தேதி இந்த மாவட்டங்களில் காற்றின் வேகம் 40-50 கி.மீ. வரை அதிகரிக்கும் என்று முன்னறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 11-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் நிலையில், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இன்று 38-39 டிகிரியாகவும், நாளை 37-38 டிகிரியாகவும் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரியாக இருக்கும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்பை உன்னிப்பாக கவனித்து, மழை மற்றும் பலத்த காற்று ஏற்படும் நேரங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்! உள் மாவட்டங்களில் 3°C வரை உயர வாய்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share