×
 

குறுவை சாகுபடிக்கு சிக்கல்..! நாளை மேட்டூர் அணை திறப்பு கிடையாது..! முக்கிய அறிவிப்பு..!!

நாளை மேட்டூர் அணை நீர் திறப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்கும் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்ட மேட்டூர் அணை தமிழகத்தின் பெரிய அணைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி இந்த அணையின் மதகுகள் திறக்கப்படும் நிகழ்வு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.

இது வெறும் நீர் திறப்பு மட்டுமல்ல; டெல்டா பகுதியின் குறுவை சாகுபடியின் தொடக்கமாகவும், பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு உயிர் கொடுக்கும் பாரம்பரிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. மேட்டூர் அணை திறப்பை விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு ஏற்ற நேரம் ஜூன் மாதம். பாரம்பரியமாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது விவசாயிகளுக்கு ஒரு திட்டமிடப்பட்ட தேதியாக இருந்து வருகிறது. இந்தத் தேதி சுமார் 92 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் சுமார் 20 முறை மட்டுமே சரியாகக் கடைபிடிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் நாளை நீர் திறப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வைகை அணையில் சட்டவிரோதமாக எடுக்கப்படும் நீர்..!! பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி..! கடும் குற்றச்சாட்டு..!!

பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படாது என்று நீர்வளத்துறை அறிவிப்பு வெளியானது. அணையின் நீர்மட்டம் 79 அடியாக இருப்பதால் நீர் திறக்க சாத்தியமில்லை என்றும் மேட்டூர் அணையில் 120 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துகு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இடுக்கி அணையின் பிரமாண்ட அழகு..! டூரிஸ்ட்களுக்கு செம்ம சான்ஸ்..!! முக்கிய அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share