மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு - மக்களே வெளியானது மிக முக்கிய அறிவிப்பு...!
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவேரி, வெண்ணாறு கொள்ளிடம் உளிட்ட அற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4வது நாளாக 120 அடியாகவே நீடித்து வருகிறது. அணைக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து காவரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 75,000 கன அடி தண்ணீர் திறக்கப்படக்கூடும் என்பதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவேரி, வெண்ணாறு கொள்ளிடம் உளிட்ட அற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
காவிரி ஆத்திலிருந்து 50 ஆயிரம் கன அடி முதல் 75 ஆயிரம் கனடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் தஞ்சை மாவட்டம் காவிரி கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாப்பநாசன் தாலுக்கா, கோவிந்தநாட்டு சேரி ஊராட்சி , பட்டுக்குடி, கூடலூர், புத்தூர்,குடிக்காடு உள்ளிட்ட கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பெயரில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறையினர் ஊரக வளர்ச்சி துறையினர் உட்பட அரசு அதிகாரிகள் அந்த பகுதியை பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வாகனத்தில் ஒளிப்பெருக்கி வைத்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்த ஏரியா மக்கள் உஷாரா இருந்துங்கோங்க... விட்டாச்சு வெள்ள அபாய எச்சரிக்கை...!
மேலும் வெள்ள வரும்போது கிராம மக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், பொதுமக்களை பாதுகாப்புடன் இருக்கவும் கொள்ளிடம் ஆற்றில் யாரும் குளிக்கவோ, மீன் பிடிக்க இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 10 மணி நேரம் போர் நிறுத்தம்.. நிம்மதி பெருமூச்சு விடும் காசா.. கவலை தோய்ந்த முகத்தில் சற்றே ஆறுதல்..