×
 

MGR சிலை உடைப்பு... உடனடியா நடவடிக்கை எடுங்க... பொங்கி எழுந்த EPS...!

கன்னியாகுமரியில் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் சந்திப்பில் எம்ஜிஆர் சிலையின் கைப்பகுதி உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், எஸ்பி லலித்குமார் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிமுகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் சிலையின் கைப்பகுதியை நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். 

எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், பார்வதிபுரம் சந்திப்பில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர், கழக நிறுவனர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலையின் கை பகுதியினை சில விஷமிகள் சேதப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெய்பீம் TO பைசன்..! படம் பார்க்க மட்டும் டைம் இருக்கா ஸ்டாலின்? விவசாயிகளுக்காக குரல் கொடுத்த EPS…!

தங்களது இதயதெய்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலையினை சேதப்படுத்தியவர்களுக்கும், அதன் பின்னணியில் உள்ள மறைமுக எதிரிகளுக்கும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். எம்ஜிஆர் சிலையை உடைத்து தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அந்த கூட்டணிக்கு விஜய் போனா தற்கொலைக்கு சமம்.... TTV தினகரன் பரபரப்பு பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share