தவெக அரசுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... தரையில் பாலைக் கொட்டி போராட்டம்...!
பால் உற்பத்தியாளர்கள் தங்களது பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடுஅரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் பால் உற்பத்தியாளர்கள் தங்களது பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழக அரசு சட்டப்பேரவையில் அண்மையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி அறிவித்தது. பாலுக்கால உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில்தமிழக அரசு அறிவித்துள்ள இந்தக் கூடுதல் கொள்முதல் விலை போதாது மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென தமிழகம் முழுவதும் இன்று முதல் பால்உற்பத்தியாளர்கள் அரசின் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்காமல் புறக்களிக்க போதுதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை, பூலாம்பாடி, வரகுபாடி, குடிக்காடு, அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆவுனுக்கு பால் வழங்காமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை... பல்லடத்தில் களமிறங்கிய பால் உற்பத்தியாளர்கள்... காலையிலேயே பேரதிர்ச்சி...!
இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 10 உயர்த்தி அறிவிக்ககோரி கூட்டுறவு சங்கத்திற்கு தங்களது பாலை ஊத்தாமல் புறக்கணித்து பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் பாலை சாலையில்கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கவில்லை என்றால் தங்களது பாலை கூட்டுறவு சங்கத்திற்கு ஊத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50-ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, மாப்பிள்ளை கவுண்டன் புதூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகள் பாலை தரையிலும், சாலையிலும் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: “பத்தல... பத்தல...” - சி.எம்.விஜய் அறிவிப்பால் பால் உற்பத்தியாளர்கள் கடும் அப்செட்... எதிர்பார்ப்பு என்ன?