×
 

“பத்தல... பத்தல...” - சி.எம்.விஜய் அறிவிப்பால் பால் உற்பத்தியாளர்கள்  கடும் அப்செட்... எதிர்பார்ப்பு என்ன?

பால் உற்பத்தியாளர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வரின் 110 விதியின் கீழ் பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தியது பால் உற்பத்தியாளர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் இன்று காலை 110 விதியின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் விலை உயர்த்தியும் இரண்டு ரூபாய் ஊக்கத்தொகையாகவும் மொத்தம் மூன்று ரூபாய் பால் விலை உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு பால் உற்பத்தியாளர்களை பெரும் ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு ஊக்கத்தொகையாக பத்து ரூபாயும் சேர்த்து 20 ரூபாய் உயர்த்தி கேட்ட நிலையில், இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 8.3% கொழுப்புள்ள பாலுக்கு 4.4 % கொழுப்புள்ள பாலுக்கும் லிட்டர் ஒன்றுக்கு 30 ரூபாய் வழங்கி வந்த நிலையில், நான்காண்டுளாக உயர்த்தப்படாத நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மூன்று ரூபாய் உயர்த்தி 38 ரூபாய் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இதையும் படிங்க: பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால்... தவெக அரசுக்கு கெடு விதித்த பால் உற்பத்தியாளர்கள்...!

இப்போதைய அறிவிப்பின் படி மூன்று ரூபாய் உயர்த்தி 41 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக கால்நடை தீவனங்களின் விலை 100% உயர்ந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளையும் பால் உற்பத்தியாளர்களையும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் பத்து ரூபாய் பால் உற்பத்தியாளருக்கு அதிகமாக வழங்கி பாலின் விலையை 20 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆவின் நிறுவனங்களுக்கு 110 முதல் 150 வரை தினசரி வந்த மாதிரிகள் தற்பொழுது15 மாதிரிகள் மட்டுமே வருகிறது.

ஆவின் நிறுவனத்திற்கு 35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல்  கிடைக்கிறது. இதனால் ஆவின் நிறுவனத்தால் பொதுமக்களுக்கு தரமான பால் வழங்க முடிவதில்லை. தனியார் நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் கூடுதலாக விலை கொடுத்து ஆவின் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். எனவே அரசு பரிசீலனை செய்து பாலின் விலையை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

இதையும் படிங்க: ஆவின் பால்களில் ரசாயன நெடி..! பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை திருப்பி அனுப்பிய மதுரை மண்டலம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share