சி.எம். விஜய்க்கு புடவை போர்த்திய நயினார் நாகேந்திரன் ... அமைச்சர் ஷாஜகான் சொன்ன அதிரடி விளக்கம்...!
சால்வை, புடவை, வேட்டி ஆகியவை மரியாதை நிமித்தமாக தரப்பட்டு வருகிறது. இதனை சர்ச்சை ஆக்காமல் ஆக்கபூர்வமாக வழிகளில் நாம் செயல்பட வேண்டும் என தெரிவித்தார் .
தமிழக வெற்றி கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்து செயல்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என கூறப்படுகிறதே? என செய்தியாளர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் இடம் கேட்டதற்கு இதெல்லாம் வதந்தி என தெரிவித்தார் .
திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் பூங்கா மற்றும் நடைபாதை திறப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் வினோத் மற்றும் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ஷாஜகான் இடம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது
அப்போது அவரிடம், முதல்வர் விஜய் யை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புடவையை சால்வையாக அணிவித்தது தற்போது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறதே? என கேட்டதற்கு சால்வை, புடவை, வேட்டி ஆகியவை மரியாதை நிமித்தமாக தரப்பட்டு வருகிறது. இதனை சர்ச்சை ஆக்காமல் ஆக்கபூர்வமாக வழிகளில் நாம் செயல்பட வேண்டும் என தெரிவித்தார் .
இதையும் படிங்க: அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழக வெற்றி கழகத்துடன், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதெல்லாம் வதந்தி தான் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார் .
உங்களது இல்லத்தை தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் முற்றுகையிட போவதாக தகவல் உள்ளது என கேட்டதற்கு , எங்கள் கட்சி அலுவலகத்திற்கு சோபா வந்ததாக ஜவஹர்லால் தெரிவித்தார் .
உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்ததை கண்டித்து நான் கருத்து கூறினேன் அ அதற்காக எனது வீடு முற்றுகையிடப்படும் என ம இது சிறுபிள்ளைத்தனம் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார் .
இதையும் படிங்க: "போலி பரப்புரையை பைசா கூட மதிக்காத புதுவை மக்கள்"..! காங்கிரசை விளாசிய நயினார் நாகேந்திரன்..!!