×
 

ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் சென்டம்! ஏன் இவ்வளவு சந்தேகம்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் சென்டம் எடுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி விளக்கம் அளித்துள்ளார்.

செஞ்சியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வேதியியல் பாடத்தில் ஒரே மையத்தில் 167 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர். அது எப்படி ஒரே தேர்வு மையத்தில் ஒரே பாடத்தில் 167 பேர் சென்டம் எடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்ததோடு பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா  என்ற சந்தேகமும் எழுந்தது. இது தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்த பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்ததாக குற்றச்சாட்டை முன் வைக்கிறீர்களோ அதே மாணவர்கள் மற்ற பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும் கடந்த ஆண்டும் செஞ்சி பள்ளியில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்ற தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்கள் என அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் ஊடகத்தில் வெளியாகி விட்டதாகவும், இந்த விஷயத்தை எழுதிவிட முடியாது என்றும், தன் மீது சந்தேகப்பார்வை திரும்பியுள்ளதாகவும், உரிய விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

ஒருவேளை தவறு நடக்கவில்லை என்பது உறுதியானால் அந்த பள்ளி ஆசிரியர்களின் வயிற்றுவிக்கும் முறையை தமிழக முழுவதும் எடுத்துச் செல்வோம் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: 10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share