×
 

சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட இளைஞர்களே தயாரா?... தேதியோடு அமைச்சர் அருண் ராஜ் வெளியிட்ட குட்நியூஸ்..!

அரசு ஆதரவாக இருக்கிறதோ இல்லையோ எந்த இடைஞ்சலும் தராது என்கிற நம்பிக்கையில் இப்பொழுது முதலீடு செய்ய முன்வருகிறார்கள்.

வரும் அக்டோபர் 10ஆம் தேதி சண்முக பொறியியல் கல்லூரி நிறுவனத்தில் சேலம் ஈரோடு நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த மூவாயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.300-க்கும் மேற்பட்ட சிறந்த நிறுவனங்கள் இதில் கலந்து  உள்ளனர். அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற வேண்டும். திருச்செங்கோட்டில் தமிழக அரசின் மருத்துவம் மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

திருச்செங்கோடு சண்முகா பொறியியல் கல்லூரி நிறுவன வளாகத்தில் நடந்த ஸ்டார்ட் அப் கனெக்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக அரசின் மருத்துவம் மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கூறியதாவது:  தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கையில் கூறியபடி அடுத்த மாதம் 10ம் தேதி நடக்க உள்ளது. இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அக்டோபர் மாதம் 10ஆம் தேதி நடக்கவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட முதன்மையான நிறுவனங்கள் கலந்து கொண்டு 3000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க உள்ளனர். இதில் ஐடிஐ, டிப்ளமோ, கலை அறிவியல் கல்லூரியில் படித்தவர்கள் என பலரும் கலந்து கொள்ளலாம். பெண் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதையும் படிங்க: அடி தூள்...!! - இனி அரசு மருத்துவமனைக்கு போறீங்களா?... இதை கட்டாயம் கொண்டு செல்லக்கூடாது...!

தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்து முதல் முறையாக இந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இது வேலையை தருவதற்காக மட்டுமல்ல தொழில் மூன்றாவது வராக இளைஞர்களை உருவாக்குவதற்காகவும் தான் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. நேர்மையான,  முறையான, உத்தரவாதமான ஆட்சி நடத்த வேண்டும் என விரும்பும் தமிழக முதல்வர் இளைஞர்களுக்கு இது போன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்க முகாம்களை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்த உள்ளார்கள்.

ஸ்டார்ட் அப் டிஎன் என்பதை நாம் தான் நடத்துகிறோம் என சொல்லவில்லை. மற்றவர்கள் நடத்தியதை விட எவ்வளவு சிறப்பாக நடத்த வேண்டும் என முடிவெடுத்து தொடங்கி இருக்கிறோம். நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் தலைமையிலிருந்து கீழ் மட்டம் வரை திறமையான நிர்வாகத்தை தருகிறோம் என்ற நம்பிக்கையில் தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பாத பல்வேறு நிறுவனங்களும், தற்போது விரும்பி வந்து முதலீடு செய்ய வருகிறார்கள். மற்றவர்களை விட நம் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாடு தொழில் தொடங்க சிறந்த தளமாக உள்ளது.

அரசு ஆதரவாக இருக்கிறதோ இல்லையோ எந்த இடைஞ்சலும் தராது என்கிற நம்பிக்கையில் இப்பொழுது முதலீடு செய்ய முன்வருகிறார்கள். தொழில் தொடங்க ஏதுவான சூழலை உருவாக்கியுள்ளோம். அரசு மீதும் நிர்வாகத்தின் மீதும் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளோம். ஸ்டார்ட் அப் டி என் நிறுவனத்திற்கு புதிய தலைமுறை நியமித்துள்ளோம். ஏற்கனவே இருந்தவர் ராஜினாமா செய்ததால் புதிய வரை நியமித்து சிறந்த படிப்பாளியும் தொழில் முனைவராக உள்ளவரையும் தமிழ்நாடு அரசு மீண்டும் தலைவராக நியமித்துள்ளது.

இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. ஸ்டார்ட் அப் டி என் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் சரியான நபரை தேர்ந்தெடுத்துள்ளோம். எட்டு கோடி பேர் உள்ள தமிழகத்தில் கூடுதல் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்கிற நினைப்பில் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது.

சாலமன் பாப்பையா அவர்கள் மறைவு மிகுந்த வேதனை அளித்துள்ளது. தமிழ் கூறும் நல் உலகத்தின் சிறந்த பேச்சாளராக அனைத்து பண்டிகைகளிலும் அவருடைய பட்டிமன்ற நிகழ்ச்சிகளை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் செயல்பட்ட சாலமன் பாப்பையா அவர்களையும் மறைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. அவரது மகன் கேட்டுக்கொண்டபடி தமிழக முதல்வரிடம் கலந்து பேசி அரசு மரியாதை தர வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது நாம் அவர்களுடன் போட்டி போட வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தில் படித்த இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நம்முடைய மனித வளத்தை மனதில் வைத்து தான் பெரிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க முன்வருகின்றனர். அதே நேரத்தில் அரசு சலுகைகள் என்னென்ன அந்த நிறுவனங்களுக்கு தர முடியும் என எடுத்து கூறுவதன் மூலம் தான் தொழில் முதலீடுகள் வருகின்றன. இந்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த தொழில் முதலீடுகள் நமது மாநிலத்திற்கு வரும் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும் என்றார். 

இதையும் படிங்க: விஜயை சீண்டிய நயினார்..! அம்மா விவகாரத்தில் அமைச்சர் அருண் ராஜ் கொடுத்த பதிலடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share