×
 

அதெல்லாம் முடியாது! தேவைப்பட்டால் விஜயும் "ARREST"... அமைச்சர் துரைமுருகன் உறுதி...!

தேவைப்பட்டால் கரூர் சம்பவம் தொடர்பாக விஜயையும் கைது செய்வோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து கட்சியினருக்கும் பிரச்சாரம் செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கூறி செல்ல உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக வெற்றிக்கழகத்திற்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததுடன் கண்டனத்தையும் பதிவு செய்தார். விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என்றும் ஏன் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை., என்ன மாதிரியான கட்சி இது., என்று கேட்டார்.

மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று காட்டமாக தெரிவித்த நீதிபதி, சம்பவம் நடந்தவுடன் தமிழக வெற்றி கழகத்தினர் அங்கிருந்து பறந்து விட்டதாகவும், தலைமறைவாவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தெரிவித்தார். ஹிட் அண்ட் ரன் வழக்கு பதியப்பட்டதா என்றும் விஜய் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா என்றும் ஏன் இந்த தாமதம் எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை தமிழக அரசுக்கு முன் வைத்தார். ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் கரூர் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா என்றும் கேட்டார்.

தொண்டர்கள் பின்தொடர்பவர்களை கைவிட்டு தலைவர் முதல் அனைவரும் மறைந்து விட்டதாகவும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு குறைந்தபட்ச பொறுப்பு கூட இல்லை என்றும் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது எனவும் தெரிவித்தார். சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்று கூறிய நீதிபதி, ஆதவ் அர்ஜுனா சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா என்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கவலையே வேண்டாம்... SIT மூலம் கரூர் உண்மை வெளிவரும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி!

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனாவசியமாக யாரையும் கைது செய்ய மாட்டோம் என்றும் கரூர் வழக்கில் நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளதாகவும் தெரிவித்தார். விஜயை கைது செய்யும் நிலை வந்தால் நிச்சயம் கைது செய்வோம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 7 நாட்களாக தண்ணி காட்டும் புஸ்ஸி ஆனந்த்... திணறும் தனிப்படை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share