×
 

+2 மாணவி கொடூரமாக கொலை... இரவோடு, இரவாக களமிறங்கிய கீதா ஜீவன்... உடனே தலைகீழாக மாறிய சீன்...!

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி மரணம்  தொடர்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன்    அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு வார்த்தை நடத்தினர் 

குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார் காவல்துறைக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17வயது பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி  நேற்று  அங்குள்ள காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இது குறித்து குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையில் உயிரிழந்த பள்ளி மாணவியின் உறவினர்கள்  குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்கு சாலையில் , தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில்  சாலை மறியல் போராட்டத்தில் மாணவியின் பெற்றோர் உறவினர் மற்றும்  பொதுமக்கள் என அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதையும் படிங்க: “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்தச் சிறுமியின் பெற்றோர் மற்றும்  உறவினர்களுடன்  அமைச்சர்  கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேடநத்தம் சிறுமி படுகொலை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து, கைது செய்து தக்க தண்டனை பெற்றுத் தருவதில்  முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து சுமார் 9 மணி நேரமாக நீடித்து வந்த 9 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் நீண்ட நெடு நேரமாக அந்த சாலையில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. 

இதையும் படிங்க: இனி ஒவ்வொரு சம்மருக்கும் ரூ.2 ஆயிரம்...! அமைச்சரின் அறிவிப்பால் பெண்கள் செம்ம குஷி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share