முதல் வெளிநாட்டு பயணத்திலேயே சாதித்த அமைச்சர் கீர்த்தனா... உலக தரத்துக்கு மாறும் தூத்துக்குடி..!! புதிய ஒப்பந்தம்..!!
முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதில் தமிழக வெற்றிக் கழக அரசு உறுதியுடன் செயல்படுவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
கப்பல் கட்டும் தளம் அமைக்க, ஹூண்டாய் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாட்டின் அரசியல் களம் சமீப காலமாக பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ், விசிக், இஸ்லாமிய லீக் உள்ளிட்ட கட்சிகளின் வெளி ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற போது ஒன்பது அமைச்சர்கள் அவருடன் பொறுப்பேற்று இருந்தனர். அவர்களும் அமைச்சர் கீர்த்தனாவும் இடம்பெற்றிருந்தார். சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், முதல் வெளிநாட்டு பயணமாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு தென்கொரியா பயணம் மேற்கொண்டுள்ளார்.
HD ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் தலைமையகம், கப்பல் கட்டும் வசதி, உற்பத்தி அமைப்புகளை நேரில் பார்வையிட்டு, தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து கலந்துரையாடினர். அப்போது, உலகளாவிய முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு முன்னுரிமை அளிப்பதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். தென்கொரியா சென்ற அமைச்சர் கீர்த்தனா, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக ஹூண்டாய் ஹெவி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!
தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் திட்டத்தை செயல்படுத்த தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும் என HHI நிறுவனத்திடம் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மேலும், தமிழகத்தை உலகளாவிய முதலீட்டு இலக்காக உயர்த்தும் நோக்கத்தில் தவெக அரசு உறுதியுடன் செயல்படுகிறது என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில்வளர்ச்சியை மேலும் வேகப்படுத்துவதில் தவெக அரசு உறுதியாக உள்ளது எனவும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொந்த தொகுதியே இருண்டு போச்சு..! முதல்வர் விஜயை விமர்சித்த TTV தினகரன்..!