×
 

சொந்த தொகுதியே இருண்டு போச்சு..! முதல்வர் விஜயை விமர்சித்த TTV தினகரன்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிகழ்வதை சுட்டிக்காட்டி டி டி வி தினகரன் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் சொந்த தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகமெங்கும் அறிவிக்கப்படாமல் அரங்கேறும் திடீர் மின்வெட்டால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் வீதிகளில் வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் வெளியாகும் தகவல்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே முடியாத அளவிற்குக் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், இத்தகைய அறிவிக்கப்படாத மின்வெட்டு அவர்களை வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டாலும் குறைவான மின் அழுத்தப் பிரச்சினையாலும், குழந்தைகளும் முதியவர்களும் அசௌகரியத்திற்கு உள்ளாவதோடு, வீட்டில் உள்ள மின்சாதப் பொருட்களும் பழுதாகி வருவதும் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம்..! விஜய் அரசு மீது TTV தினகரன் குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர்கள் என்றைக்குச் சொன்னார்களோ, அன்று முதலே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டுகள் தொடர்வது, தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்றும் ttv தினகரன் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் படும் துயரங்களை அலட்சியமாக எதிர்கொள்ளாமல் மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: மேட்டூர் திறப்பில் சிக்கல்.. குறுவை விவசாயம் ஆபத்தில்..!! தவெக அரசை எச்சரித்த டிடிவி தினகரன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share