கோல்ட்ரிப் மருந்து ஆலை தற்காலிகமாக மூடல்... அமைச்சர் மா.சு. விளக்கம்...!
கோல்ட் ரிப் மருந்து ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் சோக சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. 1 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் லேசான காய்ச்சல், இருமல் காரணமாக உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றனர். அப்போது அளிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் போன்ற இருமல் மருந்துகளை உட்கொண்ட பிறகு, நிலைமை திடீரென மோசமடைந்தது.
சிறுநீர் வெளியேறாமை, சிறுநீரகத் தொற்று, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றின. பவர் அருகிலுள்ள மகாராஷ்டிராவின் நாக்பூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 குழந்தைகள் டயலிசிஸ் சிகிச்சை பெற்றபோதிலும் உயிரிழந்தனர். இப்படி இதுவரை 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அணுகுமுறை குழுக்கள் சிந்த்வாராவில் விசாரணை நடத்தி, மருந்து மாத்திரைகளை சேகரித்துள்ளன. மேலும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகியவை இந்த மருந்துகளின் தரத்தை சோதித்து வருகின்றன. இந்த மருந்து ஆலை நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க... மா. சு. எச்சரிக்கை...!
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை வழங்கி இருந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறி இருந்தார். இந்த நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத இரண்டு தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின் கோல்ட் ரிப் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேட்டது கிடைக்காட்டி போட்டி கிடையாது! அடம் பிடிக்கும் ஜிதன் ராம் மஞ்சி! தேஜ கூட்டணியில் சலசலப்பு!