×
 

“விஜய் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்!” அமைச்சர் மா. சுப்பிரமணியம் விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகத்தின் அரசியல் வரலாறு மற்றும் சாதனைகள் குறித்துத் தெரியாமல் அறியாமையின் உச்சத்தில் பேசுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்றார். அப்போது அவர்,  ₹6.64 கோடி செலவில் கட்டப்பட்ட 5 புதிய மருத்துவக் கட்டடங்கள் மற்றும் அதிநவீன மருத்துவக் கருவிகள், ₹2.44 கோடி மதிப்பிலான நவீன நீராவி சலவை கூடம். ₹1.20 கோடி செலவில் அமைக்கப்பட்ட பன்னோக்கு பல்மருத்துவ நிலையம் உட்பட முடிவடைந்த பல்வேறு பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் ₹9 கோடி மதிப்பில் கழிவுநீர் மேலாண்மை மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜய் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாடு பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரியாகச் சாதனை படைத்துள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகளைக் குறிப்பிடாமல் பேசுவது விஜய்யின் அறியாமையையே காட்டுகிறது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் உயர்கல்வித் துறையில் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

சமீபகாலமாக நிலவும் சர்ச்சைகள் குறித்துப் பேசிய அமைச்சர், “அரசு அங்கீகாரம் இல்லாமல் எந்த ஒரு மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படக் கூடாது. அப்படி விதிகளை மீறிச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

 

இதையும் படிங்க: "நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு!" குரூப் 2 தேர்வு ரத்து குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share