“விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
“திமுகவின் ரூ.5000 உதவித்தொகை என்பது வெறும் தேர்தல் நாடகம்; போதைப் பொருள் புழக்கம் மற்றும் வரி உயர்விலிருந்து மக்களைத் திசைதிருப்பவே இந்த அறிவிப்பு” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்துத் தனதுப் பாணியில் காரசாரமானப் பதில்களை அளித்தார்.
விஜய் அண்மையில் இபிஎஸ் மற்றும் ஸ்டாலின் குறித்துப் பேசிய விமர்சனத்திற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன். பாவம், விஜய்க்கு அரசியலில் துளி கூட அனுபவமே இல்லை. அவர் முதலில் தனது வீட்டை விட்டு வெளியே வரட்டும். குறிப்பாக, நடிகை திரிஷாவிடம் இருந்து அவர் வெளியே வர வேண்டும்."
குடும்பத்தோடு நல்ல உறவைப் பேண வேண்டும். அண்ணா, எம்.ஜி.ஆர் போன்றப் பெரியத் தலைவர்கள் வழிநடத்திய இயக்கங்கள் பற்றிப் பேசும்போது ஒரு நாகரிகம் வேண்டும். வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் எல்லாம் அரசியல் செய்ய முடியாது.
இதையும் படிங்க: ஒரு கோடி குடும்பங்கள் புறக்கணிப்பு: திமுக அரசின் நிதியுதவி திட்டத்தில் பாரபட்சம் என பாமக புகார்!
தேர்தல் நெருங்குவதால் மக்களை ஏமாற்றவே இந்த ரூ.5,000 அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழக மக்கள் கோடைக்கால வெயிலில் வாடியபோது இத்தகையத் தொகுப்புகளை வழங்கினார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் மற்றும் போதைப் பொருள் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. மேலும், சொத்து வரி மற்றும் மின்சாரக் கட்டணம் 300 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் மக்கள் மறந்துவிட வேண்டும் என்பதற்காகவே இந்தத் தொகையை வீசியெறிகிறார்கள். தமிழக மக்கள் இனி இவர்களின் ஏமாற்று வாக்குறுதிகளை நம்ப மாட்டார்கள்.
விஜய்யின் இன்றையச் சேலம் பொதுக்கூட்டத்தில் (நிர்வாகிகள் சந்திப்பு) கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியாகி இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாதச் சூழல் நிலவுகிறது. இதுவே இந்த ஆட்சியின் இலட்சணம்" என நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து நைனார் நாகேந்திரன் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருப்பது சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!