×
 

சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

மதுரை மாவட்டத் தொகுதிகளில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் மொத்தம் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் சோழவந்தான் தொகுதி திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு 2026 தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து அலங்காநல்லூர் பேரூர் கழகச் செயலாளர் உட்பட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்த மேடையில் தான், நாடாளுமன்றத் தேர்தலுக்கு எப்படிப் பணியாற்ற வேண்டுமென கட்சி நிர்வாகிகளைக் கண்டித்தாகவும், அதன் பிறகுதான் தேர்தல் முடியும் வரை அனைவரும் கட்சித் கொடியுடன் சென்று அனைத்து வேலைகளையும் பார்த்தார்கள் எனவும் தெரிவித்தார்.

இன்னும் மூன்று நான்கு நாட்களில் தமிழக முதல்வர் வேட்பாளர்களை அறிவிப்பார் என்றும் வேட்பாளர்களை அறிவிப்பதை முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். நாம் தேர்தல் பணியில் முழு கவனம் செலுத்தினால், மதுரை மாவட்டத் தொகுதிகளில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் மொத்தம் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என்றும் நமக்கு அமைந்திருக்கும் கூட்டணி மிகவும் வலுவானது. அக்கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் நாமும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "நாயை நிப்பாட்டினாலும்"... மானங்கெட்டு போய் கூட்டணியில் இருக்குதா காங்கிரஸ்? விளாசிய அதிமுக..!!

மீண்டும் இரண்டாவது முறையாகத் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் வர வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையாக ஆட்சிப் பீடத்தில் அமர வேண்டும் எனவும் தற்போது திமுகவில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தேர்தல் களத்தில் மிகச்சிறப்பாகப் பணியாற்ற முன்வந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்த சோழவந்தான், தற்போது திமுகவின் கோட்டையாக மாறியுள்ளது என்று கூறிய அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் தொகுதியில் மீண்டும் ஒரு வெற்றிச் சரித்திரத்தைப் படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share