×
 

தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

தோல்வி பயத்தில் திமுகவினர் வன்முறையை கையில் எடுப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகர்நோன்புத் திடலில் தனியார் தொலைக்காட்சி சார்பில் தேர்தல் விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்தார். விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி பேசத் தொடங்கிய சமயத்தில், தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பி தகராறில் ஈடுபட்டனர். சிலர் மேடை நோக்கி நாற்காலிகளையும், கற்களையும் வீசத் தொடங்கினர்.

இந்தத் திடீர் அராஜகத்தால் விவாத மேடையில் பெரும் கலவரம் ஏற்பட்டது. தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே அடிதடி மோதல் உருவானது. திருப்புவனம் பேரூராட்சி சேர்மனும் தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளருமான சேங்கை மாறன் இந்தச் சம்பவத்தில் தூண்டுதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் தாக்குதலில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த தொகுப்பாளர் மீது நாற்காலி நேரடியாக விழுந்தது. அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. 

இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தால் வன்முறையைக் கையில் எடுக்கும் திமுக-வுக்கு அழிவு நிச்சயம் என்று கூறினார். திமுக மாவட்டச் செயலாளர் சேங்கை மாறனின் கூலிப்படை ஆட்கள் ஊடகவியலாளர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.

இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகவியலாளர்கள் தொடங்கி, பெண்கள், விவசாயிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் எனத் திமுகவின் ரவுடிகளால் யாருக்கும் ஆட்சி முடியும் தருவாயிலும் கூட பாதுகாப்பில்லை என்று தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை உணர்ந்த திமுக தனது ரவுடிதனத்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைக்கிறதா? அல்லது, தான் தோற்கும் போது தமிழகத்தில் யாருமே இருக்கக் கூடாது எனக் கொலைவெறியில் ஆடுகிறதா? என சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

மொத்ததில், இனியொரு முறை திமுகவின் ரவுடியிச ஆட்சி அமைந்தால் என்ன நடக்கும் என்பதையே இந்தக் கொடூரத் தாக்குதல் உணர்த்துகிறது என்றும் தமிழ்நாடும் தமிழ் மக்களும் வாழ வேண்டுமென்றால், திமுக வீழ வேண்டும் எனவும் கூறினார். 

இதையும் படிங்க: அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share