×
 

திமுக தொண்டன் கூட இப்படி சில்லிதனமா நடந்துக்க மாட்டார்! ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர்..!

தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறிய ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, அண்ணாவின் கொள்கைகளை அடுத்து ஒருவர் கடைப்பிடித்துக் கொண்டு வர முடியும் என்றால் அது தலைவர் விஜய் ஆல் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார்.

அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொள்கைகளை உள்வாங்கி ஒரு அரசை உருவாக்க முடியும் என்றால் அது விஜய்யால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார். அண்ணா கூறியதைப் போல் தம்பியே வா தலைமை ஏற்க வா என தலைவர் விஜயை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறினார். 

மேலும், தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி இடையூறு செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை அமைச்சர் மூர்த்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தவெக மாநாட்டிற்கு தாங்கள் ஒரு துளி அளவு கூட இடையூறு செய்யவில்லை என்றும், எந்த ஒரு திமுக தொண்டனும் அதுபோன்ற சில்லித்தனமான வேலைகளில் ஈடுபடுவது இல்லை என்றும் கூறினார். ஆதவ் அர்ஜுன் வேண்டுமென்றே இது போன்ற அவதூறுகளை எங்கள் மீது பரப்பி உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கண்ண மூடிட்டு ஆதரிக்க முடியுமா? அரசியல் ரீதியா அணுகனும்! சிபிஆர் குறித்து TKS இளங்கோவன் பேட்டி..!

நேற்று நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்தும் தங்களுடைய பகுதியில் இருந்தும் எந்த ஒரு இடையூறும் செய்யவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உண்மைக்கு மாறாக யாரோ சொல்லிக் கொடுத்து பேசி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நாங்க என்ன கஞ்சா, சாராயம் விக்குறவங்களா? கொளுத்தினு சாவோம்! தூய்மை பணியாளர்கள் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share