436 தொலைநோக்கு திட்டங்கள்..! அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!
அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து மாநிலத்தின் உரிமை காக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
தொழில்துறை 37, மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை 30, மின் துறைக்கு 10 திட்டங்களை முதலமைச்சர் கொடுத்து இருப்பதாக கூறினார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி துறைக்கு தலா 7 திட்டங்கள் கொடுத்திருப்பதாக தெரிவித்தார். வேளாண்மை, மீனவர் நலன் மற்றும் பால்வளம், கால்நடைத்துறைக்கு தலா 27 திட்டங்களை முதலமைச்சரின் விஜய் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
அனைத்து துறை சார்பாக 436 திட்டங்களை முதல்வர் விஜய் முன் வைத்திருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். தொலைநோக்கு திட்டங்களை நோக்கி செயல்பட வேண்டும் என அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மனிதர்களின் மேம்பாடு, மீனவர்கள் வளர்ச்சி என அனைத்து துறை வளர்ச்சி குறித்து பேசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மின்வாரிய கோப்புகள் மாயம்..! திருடிவிட்டால் தப்பித்து விட முடியாது... அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை..!!
அனைத்து துறைகளுக்கும் முதல்வர் விஜய் இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்தார். போதை இல்லா தமிழகம் என்ற நிலைப்பாட்டில் அனைத்து பணிகளையும் முடுக்கி விடவும் அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். தமிழக மக்கள் மேம்பாட்டுக்காக எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று முதல்வர் தெளிவாக அறிவுறுத்தி இருப்பதாகவும் புட்கா விற்பனை செய்யும் கடைகளில் நாள்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு சட்டப்பூர்வ தடை..! அரசு பணிக்கு லஞ்சம் கிடையாது... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!