"உதயநிதிக்கு வக்கிரபுத்தி"..! MLA-க்கு கூட தகுதியில்ல..! விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!!
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் நிர்மல் குமார் கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட செய்தி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகளின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை தொடர்பாக இரட்டை அர்த்தமுள்ள கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பெண்கள் குறித்து இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் வர தகுதி இல்லை என்று காட்டமாக தெரிவித்தார். வக்கிர புத்தியுடன் பேசிய உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூட தகுதியற்றவர் என்று தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதால் உதயநிதி கைது செய்யப்படவில்லை என்றும் இழிவாக பேசியதால்தான் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..!
பெண்களைப் பற்றி இழிவாக பேசுவதையே திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளனர் எனவும் அமைச்சர்கள் குமார் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா இருந்தால் எப்படி செயல்படுவாரோ அப்படிதான் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பெண்கள் தொடர்பாக விரிவாக பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழநி நில மோசடி விவகாரம்... 100% நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.!.