பழநி நில மோசடி விவகாரம்... 100% நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.!.
பழனி நில மோசடி விவகாரத்தில் 100% நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
பழனியில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, கொடைக்கானல் முன்னாள் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகின்றனர். 1888-ஆம் ஆண்டு குப்புசாமி மணியக்காரர் என்பவர் தண்டாயுதபாணி சுவாமி டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நிறுவி, சுமார் 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை அதற்காக பதிவு செய்திருந்தார். அந்த நிலம் கோயில் கைங்கரியப் பணிகளுக்கும், பக்தர்களின் பயன்பாட்டிற்கும், மடங்களின் தேவைகளுக்குமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், வணிக ரீதியாக பயன்படுத்தவோ, வாங்கவோ, விற்கவோ கூடாது என்றும் தர்மசாசனம் மூலம் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கில், 2025-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கோயிலின் இணை ஆணையர் அந்த நிலத்தின் நிர்வாகியாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதர்மண்டிக் கிடந்த அந்த நிலத்தை சுத்தம் செய்து, பக்தர்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லா வாகன நிறுத்துமிடம் கோயில் நிர்வாகம் அமைத்தது.
இந்த நிலையில், டிரஸ்ட் நிர்வாகி எனக் கூறப்படும் முருகதாஸ் என்பவர், பழனியைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய இருவருக்கு சுமார் 2 கோடி மதிப்பில் அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: TVK ஆட்சியில் கமிஷனே கிடையாது..! நாகர்கோவில் லாக்கப் டெத்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!
அதன்படி, அந்த நிலம் பல ஆண்டுகளாக கோயிலின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர், சிலர் அந்த நிலத்தை வணிக ரீதியாக பயன்படுத்தியதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் திமுக நிர்வாகி வீட்டிலும் சிபிசிஐடி சோதனை நடைபெறுகிறது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய சேதுபதி, சாட்சி கையெழுத்திட்ட திமுக வார்டு செயலாளர் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
பழனி நில மோசடி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் உறுதி அளித்தார். தவெக எம்எல்ஏக்களை வாங்கும் திமுகவின் நடவடிக்கை நேற்று வரை தொடர்கிறது என்றும் MLAக்களை வாங்க வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் திருச்சி சிவா மத்திய அமைச்சராவார் என எந்த அடிப்படையில் கூறுகின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிஞ்சது..? அரசுப்பணி சரிதான்... அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!