கரூர் சம்பவம் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிஞ்சது..? அரசுப்பணி சரிதான்... அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!
அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கரூர் சம்பவம் தொடர்பாகவும், செந்தில் பாலாஜி குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலிடம் பெறும் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் சதி வேலைப்பாடு என்றும் கட்சி சார்பாகவும் பாதிக்கப்பட்டுருக்கு உதவி செய்ததாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானாரின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்கியது சரிதான் என்றும் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலுக்கு முதலமைச்சர் விஜயின் கரூர் பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் கொடுத்தார்.
சுயநலவாதி ஊழல்வாதி யார் என்று மக்களுக்கு தெரியும் என்றும் உள்ளாட்சி தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தமிழக வெற்றி கழகம் தயாராக இருக்கிறது எனவும் குறிப்பிட்டார். கரூர் சம்பவத்தில் எஸ் பி க்கு விவரம் தெரியாதபோது செந்தில் பாலாஜிக்கு விவரம் தெரிந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார். எஸ்பிக்கு விவரம் தெரியாதபோது செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மருத்துவமனை அருகே ரூம் போட்டு காத்திருந்தார்களா என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: தேவையில்லாம ஆய்வு செய்ய கூடாது..! CM ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!
ராஜீவ் காந்தி கொலை சம்பவம், கரூர் சம்பவத்தில் விடை தெரியாத பல கேள்விகள் உள்ளது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எப்போதும் முதலிடம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறதோ அதுதான் தொடரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி ஒன்னுமே செய்யல"..! வெறும் அறிவிப்புதான்... அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!