×
 

மீண்டும் உயருகிறதா மின்கட்டணம்...? - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிரடி விளக்கம்...!

இனிவரும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) பணி நியமனங்களில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் முற்றிலும் நேர்மையாக நடத்தப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, துறையைச் சீரமைப்பதுடன் பொதுமக்களின் அனைத்துப் புகார்களுக்கும் உடனடி தீர்வு காணப்படுமென உறுதி அளித்துள்ளார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் தற்போது பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகத்தில் தற்காலிகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு காரணங்களுக்காகத் தோண்டப்பட்ட குழிகளால் மின்சார வயர்கள் பாதிக்கப்பட்டு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், அதனைச் சீராக்கி தடையற்ற மின் விநியோகம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 மேலும், தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று தெளிவுபடுத்திய அமைச்சர், தமிழ்நாடு மின்வாரியம் தற்போது 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தவித்து வருவதோடு, முந்தைய ஆட்சியில் பல டெண்டர் முறைகேடுகளும், சோலார் பேனல் கொள்முதலில் கடுமையான விதிமுறை மீறல்களும் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். இந்த நிர்வாகச் சீரமைப்பு முயற்சியில் மின்வாரியத் தவறுகள் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீதோ அல்லது தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீதோ பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். 

இதையும் படிங்க: லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!

மின்தடை குறித்துப் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலும் உடனடியாகப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், 1.40 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய மின்வாரியத்தில் தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் உள்ள பற்றாக்குறையான சூழலைச் சுட்டிக்காட்டியதுடன், இனிவரும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) பணி நியமனங்களில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் முற்றிலும் நேர்மையாக நடத்தப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எல்லா துறைகளிலும் முதல்வர் கவனம்..! தவெக புது வெர்ஷன்.. அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share