"என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!
ஜனநாயகன் திரைப்படம் பார்த்து அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விட்டு கலங்கினார்.
தமிழ் சினிமா உலகின் மிகப் பெரிய நட்சத்திரமாகவும், தற்போது தமிழக முதலமைச்சராகவும் இருக்கும் தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமான 'ஜனநாயகன்' இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை முன்னிட்டு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உற்சாகம் அலையடித்து வருகிறது. 'ஜனநாயகன் திருவிழா' என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், குறிப்பாக திரையரங்குகளில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த அரசியல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படம், விஜய்யின் 69வது படமாக அறிவிக்கப்பட்டு, அவரது அரசியல் பயணத்திற்கு முன் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் கதை மக்களின் வாழ்வோடு இணைந்த அரசியல் செய்திகளை உள்ளடக்கியதாக இருப்பதால், ரசிகர்களுக்கு இது சாதாரண பட வெளியீடாக இல்லாமல் ஒரு உணர்ச்சிப் பெருக்கமாக மாறியுள்ளது.
படம் வெளியாகும் முன்பும் பின்பும் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் உணர்ச்சி பெருக்குடன் அதை வரவேற்றனர். அத்தகைய சம்பவங்களில் ஒன்று, அமைச்சர் முகமது பர்வேஷ் படத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்ச்சி வெள்ளம். ஜனநாயகன் திரைப்படம் வெளியான நாளில் திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. முதலமைச்சர் விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அவரது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் படத்தைப் பார்க்க வந்திருந்தனர்.
இதையும் படிங்க: விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!
அவர்களில் ஒருவரான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஷ், திரையரங்கில் அமர்ந்து படத்தைப் பார்க்கத் தொடங்கினார். படம் தொடங்கியதில் இருந்து அவர் கண்ணீர் பெருக்குடன் பார்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து கண்களில் கண்ணீர் ததும்ப தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார். முதல்வர் விஜயின் கடைசி திரைப்படம் என்பது பலதரப்பு மக்கள் மனதில் பெரும் பாரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனை எடுத்துக் கூறும் விதமாகவே அமைச்சரின் இந்த காட்சிகள் அமைந்தன.
இதையும் படிங்க: "முதல்வரின் காலை உணவுத் திட்டம்"..! பெயர் மாற்றம்... விஜய் அரசின் அடுத்த மூவ்..!!