×
 

பாஜகவுக்கும், ஆதரிக்கும் அடிமைகளுக்கும் வாக்குச்சாவடியில் காத்திருக்கு சம்பவம்... அமைச்சர் ஐ.பெரியசாமி விளாசல்..!

பாஜகவுக்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் வாக்குச்சாவடியில் பாடம் புகட்டப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை விக்‌ஷித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் என்று ஒன்றிய பாஜக அரசு மாற்றப் போவதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய சட்டத் திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வர போகிறது என்றும் தெரிவித்தார்.

இதன்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்பு, ஒன்றிய அரசு 60 சதவிகிதம் மாநிலங்கள் 40 சதவிகிதம் என நிதிப் பகிர்வு முறை, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கல், விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாட்களுக்கு வேலை வழங்கப்படாது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப் போகிறார்கள் என்றும் இவை அத்தனையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் செயல்பாடுகள் எனவும் குற்றம் சாட்டினார்.

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு. கிராம மக்கள் மேம்பட வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் உன்னதக் கொள்கையைச் செயல் வடிவம் ஆக்கியது மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்றும் இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை மோடி அரசு அமைந்த பிறகு முடக்க ஆரம்பித்தார்கள் எனவும் குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: மத்திய அரசுக்கு கெட்ட எண்ணம்... தமிழக வளர்ச்சியை தாங்கிக்க முடியல... விளாசிய R.S.பாரதி...!

எந்த நோக்கத்துக்காக 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்பட்டதோ, அதனையே மோடி அரசு படுகொலை செய்தது என்றும் மகாத்மா காந்தி மீதான ஒவ்வாமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் பிரதமர் மோடி என்றும் மகாத்மா காந்தியின் பெயரையே இருட்டடிப்பு செய்யச் சதி நடக்கிறது எனவும் குற்றம்சாட்டினார். 

தங்களுடைய தகிடுதத்தங்களை மறைப்பதற்காக வெளித் தோற்றத்திற்கு வேலை நாட்களை அதிகரிப்பு, நிதி ஒதுக்கீடு உயர்வு என்று தேன் தடவியிருக்கிறார்கள் என்றும் ஆனால், வரும் காலங்களில் இந்த நாட்கள் படிப்படியாகக் குறைப்பார்கள்., பண மதிப்பிழப்பு, கருப்புப் பணம் மீட்பு என மோடி அரசின் ஏமாற்று வசனங்கள் கடைசியில் என்ன ஆனது எனவும் கேட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி கள்ள மெளனம் காப்பதாகவும், தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடிய சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசையும் அதற்குத் துணைபோகும் அடிமைகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் புறக்கணிப்பார்கள் என்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: “இனி 100 நாட்கள் இல்லை”... 100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share