சொத்துக்குவிப்பு வழக்கு... இதை செய்யுங்க..! அமைச்சர் ஐ. பெரியசாமியின் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்...!
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது அமைச்சர் ஐ பெரியசாமி, இரண்டு கோடி ரூபாயை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி சுசிலா, அவரது மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோர் மீது 2012 ஆம் ஆண்டு நஞ்சு ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 4 பேரையும் விடுவித்து உத்தரவிடப்பட்டது. பின்னர், வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனதை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். லஞ்சம் ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை நகல்களை விளக்கி வாதிட்டது. பிறகு தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், ஆறு மாதத்தில் விசாரணை நடத்தி வழக்கை முடிக்க வேண்டும் எனவும் திண்டுக்கல் மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வருவாய், பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 13 கோடியில் புதிய வாகனங்கள்... துவக்கி வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்...!
இந்த நிலையில் தன் மீதான சொத்துக்கு குவிப்பு வழக்கிற்கு எதிராக அமைச்சர் ஐ. பெரியசாமி மனு தாக்கல் செய்தார். இதனிடையே அமைச்சர் பெரியசாமியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தனர். சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளை அணுக வேண்டும் என்று அமைச்சர் பெரியசாமியின் தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு தவெக வைக்கும் வேட்டு! சைலண்டாக சம்பவம் செய்யும் விஜய்! கருத்துக்கணிப்பில் புது தகவல்!