வருவாய், பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 13 கோடியில் புதிய வாகனங்கள்... துவக்கி வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்...!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு புதிய வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தமிழகத்தின் முக்கியமான நிர்வாகத் துறைகளில் ஒன்றாகும். இது மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றுவதோடு அரசின் நிலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் உதவிகளை வழங்குவதில் மையப் பங்கு வகிக்கிறது. இத்துறையின் முக்கிய நோக்கங்கள் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் பல்வேறு அரசுத் திட்டங்களின் பயன்களை மக்களிடம் திறம்பட கொண்டு சேர்ப்பது, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி மறுவாழ்வு ஏற்பாடு செய்வது, அரசு நிலங்களைப் பாதுகாத்து நில ஆவணங்களை சீராக பராமரிப்பது, நிலச் சீர்திருத்தங்களை செயல்படுத்தி தேவைப்படும் ஏழை மக்களுக்கு நிலம் வழங்குவது ஆகியவை.
தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாநிலத்தின் நிருவாகத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. இத்துறை, அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, சான்றிதழ்கள் வழங்குதல், நில நிருவாகம், பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போன்ற பொறுப்புகளை ஏற்று செயல்படுகிறது.
குறிப்பாக, இயற்கை பேரிடர்களான வெள்ளம், புயல், சுனாமி போன்றவற்றின்போது விரைவான நடவடிக்கை போன்றவற்ற எடுப்பதால் இன்றியமையாத துறையாக இருக்கிறது.. இதற்கு போதுமான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் தேவைப்படுவதால், துறை அலுவலர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் வாகனங்கள் வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது.
இதையும் படிங்க: கருணையே இல்லையா?.. கைகளில் சாக்கடையை அள்ளி தூய்மை பணியாளர்கள் போராட்டம்...!
இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு 155 புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். சார் ஆட்சியர் உள்ளிட்டோரின் பயன்பாட்டுக்காக வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை தீர்த்திடலில் இருந்து 13 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு ஈ ஸ்கூட்டர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிங்க: திமுக மகளிரணி மாநாடு தேதி மாற்றம்... தலைமை கழகம் முக்கிய அறிவிப்பு...!