அமித் ஷா வர்றாரா? NO USE... அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி!
அமித் ஷாவின் தமிழகம் வருகை எதையும் செய்யப்போவதில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் வாக்குகள் திருடப்படுவதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். போலி வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்படுவதாக ராகுல் காந்தி சந்தேகத்தை முன் வைத்துள்ளார். கருத்துக்கணிப்புகளுக்கும் தீர்வு முடிவுகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் திடீர் திடீரென தேர்தல் தேதிகள் மாற்றப்படுவது சந்தேகத்தை அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் கூறினார். மேலும் பாஜக நடத்தும் தேர்தல் முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். வாக்களித்த வாக்காளர்களின் விவரங்கள் பூத் வீடியோ பதிவுகளை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, மின்னணு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 வினாடிகளில் மோசடியை கண்டறியலாம் என்று தெரிவித்தார்.
வாக்குத்திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் உரிமைக் குரலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் தோளோடு தோல் நிற்போம் என்று கூறினார். இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் முப்பது வாக்குகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டி இருந்தது.
இதையும் படிங்க: எங்க கிட்ட வேணாம்! நீங்க கம்பு சுத்த வேண்டியது BJP ஆளும் மாநிலத்தில தான்... முதல்வர் விளாசல்
இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். போலி வாக்காளர்கள் தொடர்பான விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, போலி வாக்காளர்கள் சேர்க்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் அசர்வாக்காளர்கள் வாக்களித்தாலே போதுமானது எனவும் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்தும் மாநாடு எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என தொடரும் என்றும் பொன்னியின் செல்வன் போல தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அமித் ஷா தமிழகம் வந்து என்ன சாதிக்கப் போகிறார் என்றும் பூத் முகவர்களை கூட நியமிக்க பாஜக திணறுவதாகவும்., அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: புளி வணிக மையம், 4 வழிச்சாலை... தர்மபுரிக்கு மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!