×
 

எங்க கிட்ட வேணாம்! நீங்க கம்பு சுத்த வேண்டியது BJP ஆளும் மாநிலத்தில தான்... முதல்வர் விளாசல்

தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை விமர்சித்து பேசினார்.

தர்மபுரி மாவட்டத்தில் 1,705 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் முடிவுற்ற திட்ட பணிகளையும் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

512.52 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,144 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் 363 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற 1073 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அர்ப்பணித்தார். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சியில் தான் தர்மபுரியில் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து திமுக ஆட்சியில் தர்மபுரிக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் பட்டியலிட்டு உரையாற்றினார். தொழிற்பேட்டை, அரசு கல்லூரி, பாம்பாறு, சின்னாறு புணர் அமைப்பு என தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட தெரிவித்தார். 

இதையும் படிங்க: #BREAKING: புளி வணிக மையம், 4 வழிச்சாலை... தர்மபுரிக்கு மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

தர்மபுரியில் பேருந்து வசதி இல்லாத எட்டு கிராமங்கள் போக்குவரத்து வசதி பிற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் 40 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தர்மபுரியில் 2.87 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதாக கூறினார். தர்மபுரி சிப்காட் பூங்காவில் தொழில் முனைவோருக்கு 200 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

திமுக ஆட்சியில் தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகளையும் வெளியேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவியை விமர்சித்து பேசினார். இந்தியாவின் திசை காட்டி திமுக அரசு என்று தெரிவித்த முதலமைச்சர், ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறு பரப்புவதாக கூறினார். தமிழக மாணவர்களை ஆளுநர் ரவி இழிவுபடுத்துவதாக தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளை விட இழிவான அரசியலை ஆளுநர் செய்து கொண்டிருப்பதாக கூறினார். ஆளுநர் ஆர். என். ரவி இதுவரை திமுக அரசின் மீது கூறிய குறைகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விமர்சித்தார். தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலம் என்பதை மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரமே கூறுவதாக தெரிவித்தார். தமிழகத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு இப்படி இழிவான அரசியலை ஆளுநர் செய்வதாகவும், திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொய்களை மேடை தோறும் ஆளுநர் புலம்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும் மாநிலங்களில் தான் என்று கூறிய முதலமைச்சர், பள்ளிக்கல்வியில் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டை ஆளுநர் விமர்சிப்பதாகவும் கூறினார். திராவிட மாடல்தான் இந்தியாவிற்கான திசை காட்டு என்றும் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறு பரப்புவதாகவும் கூறினார். ஆளுநர் தமிழகத்தில் நீடிப்பது தான் நமக்கு நல்லது என்று கூறினார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ்... விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் திட்டம்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share