×
 

விஜய் ஆச்சரியக்குறியோ… தற்குறியோ.. தேர்தல் மட்டுமே எங்கள் குறி..! அமைச்சர் ரகுபதி பதிலடி..!

தரக்குறைவாக பேசி விஜய் தரம் தாழ்த்திக் கொள்வதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்தார்.

தமிழக வெற்றி கழகத்தை ஆதரிப்பவர்கள் தற்குறிகள் என்று விமர்சனம் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன. தமிழக ஆட்சி கழகத்தினரையும் தற்குறிகள் என்று விமர்சிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அது என்னப்பா அது தற்குறியா? லட்சக்கணக்கானோர் தமிழக கட்சி கழகத்தினருக்கு சப்போர்ட் செய்பவர்களை தற்குறி என்று சொல்லிவிட்டு தற்போது அப்படி கூப்பிடாதீர்கள் என்று சொல்கிறார்கள் என்று கூறினார். அறிவு திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா நடத்தினார்கள். அதில் அவர்களின் தலைமையே குழப்பும் வகையில் அறிவு கண்ணை திறந்து வைக்கும் வகையில் ஒருவர் பேசி உள்ளார்.

அவர்களுடைய எம்எல்ஏவே இவ்வாறு பேசினார். தமிழக வெற்றி கழகத்திற்கு சப்போர்ட் செய்பவர்கள் தற்குறி என்றால் அதே மக்களிடம் ஓட்டு வாங்கிய நீங்கள் யார்? என்று கேட்டார். அந்த மக்களுக்கு காட்டும் நன்றியும் மரியாதையும் இதுதானா என்றும் சாடினார்.

இந்த தற்குறிகள்… தற்குறிகள் என்று நீங்கள் குறிப்பிட்டு சொல்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்களுடைய அரசியலையே கேள்விக்குறியாக்கப் போகிறார்கள் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: வாக்குரிமை பறிப்பில் இபிஎஸ் பாட்னர்... மக்கள் மன்னிக்கவே மாட்டாங்க! EPS- ஐ பந்தாடிய அமைச்சர் ரகுபதி...!

இந்த தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தரக்குறைவாக விமர்சித்து தரம் தாழ்த்திக் கொள்வதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மக்கள் மத்தியில் தனது தரத்தை விஜயை தாழ்த்திக் கொள்ளும் நிலையில் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியது இல்லை என்றும் கூறினார். விஜய் ஆச்சரியக்குறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, எங்களுக்கு தேர்தல் வெற்றி மட்டுமே குறி என்று தெரிவித்தார். எங்களுக்கு தனிப்பட்ட முறையில் யாரும் எதிரியில்லை என்றும் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

இதையும் படிங்க: பதவியைக் காப்பாற்ற நயினார் நாகேந்திரன் எதையும் பேசுவார்... பாஜகவிற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share