அவரு எங்க இளந்தலைவர் யா... உதயநிதி தலைமையேற்றால் என்ன தவறு? அமைச்சர் ரகுபதி பிரஸ் மீட்...!
உதயநிதி ஸ்டாலினின் தலைமையை ஏற்பதில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதலில் எங்கள் தலைவர் அடுத்து இளந்தலைவர் எனக் கூறினார். திமுகவில் இரண்டு கோடி தொண்டர்களை இணைத்துள்ளதாகவும் அத்தனை பேரும் முழு மனதாக உதயநிதி ஸ்டாலின் இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதியை தலைமையாக ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என அமைச்ச ரகுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் சூழலில் இளைஞர் அணி மாநாடு நடத்தி இருப்பதாக எழுந்த விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதனை மறுத்த அமைச்சர் ரகுபதி, ஏற்கனவே சேலத்தில் 15 லட்சம் பேர் கூடிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞரணி மாநாட்டை நடத்தி இருப்பதாக கூறினார்.
அது மட்டுமல்லாது ஒவ்வொரு மண்டலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இளைஞர் அணி மாநாடுகள் நடைபெற்று இருந்ததாகவும் தெரிவித்தார். எனவே, அதன் அடிப்படையிலேயே சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக இளைஞரணி மாநாடு நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: களைகட்டும் தி.மலை... முதல்வர் பங்கேற்கும் திமுக இளைஞரணி சந்திப்பு...!
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, அதிமுக இன்று முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறுவதை விமர்சித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டமன்ற பொது தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் அதிமுக முன்னதாகவே விருப்பமனுக்கள் பெறுகின்றன. இதனிடையே, கட்சியை விட்டு யாரும் போய் விடக்கூடாது என்பதற்காக அதிமுக முன்கூட்டியே விருப்பமான வாங்குவதாகவும் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் எந்த தவறும் செய்யல... ரூ.1020 கோடி ஊழல் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் கே.என். நேரு...!