“விஜய் அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல்” - தவெகவிற்கு சம்மட்டி அடி... ஒரே போடாய் போட்ட ரகுபதி...!
விஜயை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவர் முட்டாள்தனமாக பேசி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல அது விளம்பர கட்சி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பாஜகவின் ஏ டீ மோ பி டீமோ அல்ல சீ டீம், இதை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நான் சொல்லி வருகிறேன் இன்னும் சொல்லப் போனால் விஜய் அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல் என தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: விஜய் படத்திற்கு 200 கோடி ரூபாய் வாங்கிறார் என்றால் பிளாக்கில் டிக்கெட் வைத்து தான் அவர் வாங்க முடியும் ஒரு டிக்கெட்டின் விலை என்பது ரூபாய் என்றால் லாகில் ஆயிரம் ரூபாய். 920 ரூபாய் கருப்பு பணத்தை வாங்கி தான் அவருக்கு கொடுக்கிறார்கள். இதையெல்லாம் பேசினால் விஜய் மாட்டிக்கொள்வார். அவர் அறியாமலும் தெரியாமலும் பேசுகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடைபெறாத கொடுமைகளா தற்போது நடக்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: இது என்ன புது கூத்து... ஒரே குடிநீர் குழாய்க்கு இரண்டு திறப்பு விழா... இந்நாள் Vs முன்னாள் அமைச்சர்களின் அட்ராசிட்டி...!
நாங்கள் எந்த குற்றவாளியும் தப்பிக்கவிடவில்லை காப்பாற்றவில்லை. நாங்கள் தண்டிக்கின்றோம் கைது செய்கின்றோம் நடவடிக்கை எடுக்கின்றோம் விரைந்து அவர்களுக்கு தண்டனையும் வாங்கி தருகின்றோம் இதைவிட அரசு என்ன செய்ய முடியும்.
இலவசங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்களுக்கு உரிமை என்று தான் சொல்கின்றோம். மகளிர் உரிமைத் தொகை என்று வழங்குகின்றோம். அந்தப் பெண்கள் மற்றவரிடம் எதிர்பார்ப்பதை விட அரசை ஆயிரம் ரூபாய் கொடுக்கும்போது மகிழ்ச்சி அடைகிறாள்.
இலவசமாக கருத்தில் கொள்ள முடியாது இது உதவித்தொகை அல்ல உரிமைத் தொகை. நாங்கள் 2000 ரூபாய் தர முடியும் என்பது எங்களால் முடியும். எடப்பாடி பழனிச்சாமியால் அது முடியாது.
காவல்துறை அவர்களது பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் முழுக்க காவல்துறையை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. அதனால் காவல்துறைக்கு வக்காலத்து வாங்குகின்றோம் என்று அர்த்தமல்ல. அதே நேரத்தில் சில அசம்பாவிதங்களாலும் தவறுதலாலும் லாக்கப் டெத் நடக்கிறது. எடப்பாடி ஆட்சியில் நடந்ததைப் போல அடித்துக் கொள்வதெல்லாம் போலீசார் தற்போது செய்வதில்லை.
போராட்டங்கள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருப்பவர் தான் தமிழ்நாடு முதலமைச்சர். தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல அது விளம்பரக் கட்சி. பாஜகவின் ஏ டீம் பி டீம் அல்ல சீ டீம் விஜய். இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். இன்னும் சொல்லப் போனால் அமித்சாவின் ஸ்லீப்பர்செல் விஜய் என சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகிறார்.
இதையும் படிங்க: பிணவறையிலும் அலட்சியம்... நிர்வாக சீர்கேடு..! திமுகவை விளாசிய தவெக..!!