×
 

இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டு பிள்ளைகளின் DNAவில் இருக்கு!” - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!!

பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் நடந்த புதிய மாணவர் சேர்க்கை நிகழ்ச்சிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார். அரசுப் பள்ளியில் சேர்ந்த மழலைகளை வாழ்த்தி மாலை அணிவித்து அமைச்சர் ராஜ்மோகன் வரவேற்றார். நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசி போது, இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் டி.என்.ஏ.வில் இருக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கதவுகளுடன் கூடிய கழிவறைகள் திட்டத்திற்கு தான் முதல் கையெழுத்து என்றும் கூறினார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை புதிதாக சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். இந்த ஆண்டு 1.52 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை புதிதாக சேர்ந்திருப்பதாக குறிப்பிட்டார். 

தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகன், மாநிலத்தின் நீண்டகால இரு மொழி கொள்கையை உறுதியுடன் பின்பற்றப் போவதாக ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டம் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில் வந்துள்ளது.

இதையும் படிங்க: லீவா இருந்தாலும் அமைச்சர் ராஜ்மோகன் இத செஞ்சுட்டாரு..! விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டு..!!

மும்மொழி கொள்கைக்கு எந்த இடமும் இல்லை என்பதை அவர் தெளிவாக வலியுறுத்தியுள்ளார். “இருமொழிக் கொள்கை என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார். தாய்மொழியான தமிழ் உறவுகளுடன் பேசுவதற்கும், ஆங்கிலம் உலகத்துடன் தொடர்புகொள்வதற்கும் ஏற்ற மொழிகள் என்பதை அவர் சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கொதிக்கும் தமிழகம்..! பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share