×
 

லீவா இருந்தாலும் அமைச்சர் ராஜ்மோகன் இத செஞ்சுட்டாரு..! விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டு..!!

பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகள் மீது அமைச்சர் ராஜ்மோகன் நடவடிக்கை எடுத்திருப்பதாக ரவிக்குமார் எம்பி தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததைப் பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரித்ததாக கூறி பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் முன் வைத்திருந்தார். அதற்கான தீர்வு காண்பதற்காக அமைச்சர் ராஜ்மோகன் உரிய நடவடிக்கை மேற்கொண்டதாக தற்போது கூறியுள்ளார்.

பள்ளி கல்வித்துறையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் கலந்து ஆலோசித்து இருப்பதாகவும் நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் உட்பட விழுப்புரம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கட்டுத்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் உரிய நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுத்திருப்பதாகவும் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தின் பள்ளிக் கல்வியில் ஏற்பட்டிருக்கும் சரிவு குறித்து காலையில் எக்ஸ் தளத்தில் நான் போட்டிருந்த பதிவைப் பார்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று விடுமுறை நாள் என்றாலும் உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பேசியதோடு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கொதிக்கும் தமிழகம்..! பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!

அந்தத் தகவல்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னிடமும் தகவல் தெரிவித்ததாகவும் விழுப்புரம் மாவட்ட கல்வி நிலையை உயர்த்துவதற்கு அமைச்சர் ராஜ்மோகன் எடுத்துக் கொண்டுள்ள அக்கறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறதாக கூறினார்.

இதையும் படிங்க: "வலி தந்தாலும் நியாயம் இருக்கு”..! திமுகவிற்கு எதிராக போராடாதீங்க..! திருமா. அட்வைஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share