×
 

"வலி தந்தாலும் நியாயம் இருக்கு”..! திமுகவிற்கு எதிராக போராடாதீங்க..! திருமா. அட்வைஸ்..!

திமுகவிற்கு எதிராக போராட்டங்கள் வேண்டாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுகவிற்கு எதிராக எந்த போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம் பிடித்த நிலையில் திமுகவினர் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதான கோபத்தை விமர்சனங்களாக முன்வைத்து வருகின்றன. இதன் உச்சமாக குன்னம் பேருந்து நிலையப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது மட்டுமின்றி, அமைதியை சீர்குலைக்கும் வகையில் மோதல் சம்பவம் அரங்கேறியது. விசிகவினர் ஆ.ராசாவின் பேச்சுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், திமுகவினரும் எதிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்பட்ட மோதலில் கற்கள் வீசப்பட்டு, தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திமுகவிற்கு எதிராக போராட்டம் வேண்டாம் என திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். திமுகவிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் எந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார். வலியை தந்தாலும் திமுகவினரின் விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

நாம் எப்படி உண்மையாக இருந்தோம் என்பது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியும் என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்னரே ஆதவுடன் சேர்ந்து சதி செய்ததாக சிலர் கூறுகின்றனர் என்று கூறியுள்ளார். அவர்களை விமர்சிக்கும் தமிழக வெற்றிக்கழகத்துடன் கைகோர்த்து இருக்கிறோம் என்று தெரிவித்தார். நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிப்பவர்கள் விமர்சிக்க தான் செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share