×
 

ஒரு இன்ச் கோவில் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்... கலர் கலரா ரீல் சுத்துறாங்க..! அமைச்சர் ரமேஷ் பேட்டி..!!

பழனி முருகன் கோவில் நிலம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பழனி கோவில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கோவில் நிலங்களை ஒரு இன்ச் கூட யாருக்கும் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சட்டம் தெரியாமல் கலர் கலராக ரீல் சுற்றுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார். கரூரில் கோவில் நிலத்தை தமிழக வெற்றிக்கழக அரசு பட்டா போட்டு கொடுக்கவில்லை என்று அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்துள்ளார். இனாம் ஒழிப்பு சட்டத்தில் அந்த நிலங்களுக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஒருபோதும் கோவில் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறுதிப்படக் கூறியுள்ளார். கோவில் நிலங்களை பாதுகாப்பதில் தமிழக வெற்றிக்கழக அரசு எந்த சமரசமும் செய்யாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். பத்திரப்பதிவு முறைகேடு விவகாரத்தில் பொய்யும் புரட்டும் பரப்பப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சபரி வர்மனுக்கு ஒரு சட்டம்... TVK நிர்வாகிக்கு ஒரு சட்டமா..? முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்த உதயநிதி..!

மேலும், உறவினர் பெயரில் கோவில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமது உறவினர் பெயரில் பத்திரப்பதிவு என்பதை நிரூபிக்க முடியுமா எனவும் அமைச்சர் சவால் விடுத்தார். தமிழக வெற்றிக் கழக அரசு மீது ஊழல் கறை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். பின்புலம் தெரியாமல் கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்த பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: இனி SHORTAGE இருக்கக் கூடாது... ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்கணும்... முதல்வர் விஜய் அறிவுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share