×
 

கோவில்களில் முறைகேடா..? "மெயில் போடுங்க"..! அமைச்சர் ரமேஷ் அறிவுரை..!

பக்தர்கள் புகாரளிக்க ஏதுவாக மின்னஞ்சல் முகவரியை அமைச்சர் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.

தமிழக கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக மக்கள் புகார் அளிக்கும் வகையில் மின்னஞ்சல் ஒன்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்தார். தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து பொதுமக்களும் பக்தர்களும் நேரடியாகப் புகார் அளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.

கோயில்களில் சட்டவிரோதமாக பணம் வசூல் செய்தல், லஞ்சம், திருப்பணிகள் தொடர்பான ஊழல், வேலைவாய்ப்புகளில் அநியாயம் உள்ளிட்ட புகார்களை ஆதாரங்களுடன் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அமைச்சர் ரமேஷ், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோத வசூல், திருப்பணிகள் மற்றும் கோயில் வேலைவாய்ப்புகளில் லஞ்சம் பெறுதல் போன்றவற்றை ஆதாரங்களுடன் minister_hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார். புகார்கள் மீது தானும் தனது அலுவலகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவில் டிக்கெட் விலை உயர்வா..? என்னதான் நடக்குது..! விளக்கிய அமைச்சர் ரமேஷ்..!!

இந்த நடவடிக்கை கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்கள் அல்லது கண்டறியப்படும் முறைகேடுகளை அஞ்சாமல் தெரிவிக்கும் சூழலை உருவாக்க இந்த மின்னஞ்சல் வசதி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோயில் வேலைக்கு லஞ்சம் கேட்பது, பக்தர்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பது, திருப்பணிகளில் ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தப்படும். 

இதையும் படிங்க: கோயில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மற்றும் அவரது தோழி கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share